பகுதி நேர, பி.இ., -- பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாநிலத்தில், ஒன்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பகுதி நேர, பி.இ., -- பி.டெக்., படிப்புகளுக்கு, 1,465 இடங்கள் உள்ளன. இக்கலந்தாய்வுக்கு, 725 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பங்கேற்கும் அனைவருக்கும், இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.நாளை காலை, 7:00 மணியளவில், ஜவுளி மற்றும் சிவில் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு துவங்கவுள்ளது.கலந்தாய்வு செயலரான, கோவை, சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் செல்லதுரை கூறியதாவது:
புதி நேர கலந்தாய்வு, ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும். தகுதியுடைய, 725 பேர் பங்கேற்க உள்ளனர்.காலை, 7:00 மணியளவில், ஜவுளி, சிவில் படிப்புகளுக்கும், 9:30 மணிக்கு மெக்கானிக்கல் பிரிவுக்கும், மதியம், 2:00 மணியளவில், இ.இ.இ., --- இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடக்கும். தரவரிசை பட்டியல் படி, குறிப்பிட்ட சமயத்தில், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.