Breaking

Friday, June 01, 2018

இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் நாளையுடன் முடியுது அவகாசம்


அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு, நாளையுடன் முடிகிறது. இதற்கு மேல் அவகாசம் இல்லை என்பதால், விரைந்து பதிவு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, தமிழக அரசு நடத்தும், கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிவதாக அறிவிக்கப்பட்டது. 

துாத்துக்குடி கலவரத்தால், இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், தென் மாவட்ட மாணவர்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், கவுன்சிலிங் பதிவுக்கான அவகாசம், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நேற்று வரை, 1.39 லட்சம் பேர் பதிவு செய்துஉள்ளனர். நாளை நள்ளிரவு, 11:59 மணியுடன், ஆன்லைன் பதிவு முடிய உள்ளது. 

எனவே, இதுவரை பதிவு செய்யாதவர்கள் விரைந்து பதிவை முடித்து கொள்ளும்படி, அண்ணா பல்கலைஅறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog