Breaking

Wednesday, May 06, 2026

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் Applications for student admission to Government Arts and Science Colleges can be submitted starting tomorrow.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர, நாளை (07.05.2026) முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு!

செய்தி வெளியீடு எண்: 747

நாள்: 06.05.2026

செய்தி வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2026 முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 126959 (Shift-1-101022/ Shift-II 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம்

ஒரு மாணவருக்கு ரூ.48/-

பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்

SC/ST பிரிவினருக்கு கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்ப பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்

www.tngasa.in இணையதளம் வழியாக விண்ணப்பம்

பதிவுசெய்யத் தொடங்கும் நாள் 07.05.2026

பதிவு செய்ய இறுதி நாள் 29.05.2026

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog