Breaking

Wednesday, May 20, 2026

இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டு கால பிரச்னை தீர்வு காண்பாரா முதல்வர் விஜய்



இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டு கால பிரச்னை தீர்வு காண்பாரா முதல்வர் விஜய் Will Chief Minister Vijay find a solution to the 16-year-long issue faced by secondary teachers?

பள்ளி கல்வித்துறையில் 'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு 16 ஆண்டுகளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னைக்கு முதல்வர் விஜய் தீர்வுகாண்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் 6வது ஊதியக் குழுவில், 01.06.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியருக்கு கடைநிலை ஊழியர் பெறும் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது 01.06.2009 க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் அடிப்படை சம்பளம் ரூ.8370 என்றும், ஒருநாளுக்கு பின் சேர்ந்தவருக்கு ரூ. 5200 எனவும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த முரண்பாடு, 'ஒரே பணி ஒரே கல்வித் தகுதி' இருந்தால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானது என பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், இப்போராட்டத்தில் பங்கேற்று 'தி.மு.க., ஆட்சியில் தீர்வுகாணப்படும்' என வாக்குறுதி அளித்தார். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெற்ற நிலையில் தி.மு.க., ஆட்சியில் தீர்வு காணப்படவில்லை. போராடிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் முந்தைய கல்வி அமைச்சர் மகேஷூக்கு எதிராக ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக கொதித்தெழ, அது தேர்தலில் எதிரொலித்தது.

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க தி.மு.க., ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மூன்று நபர் குழு இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

16 ஆண்டுகளாக போராட்டம் நடத்துவதுடன் ரூ.பல ஆயிரம் சம்பளத்தையும் ஆசிரியர்கள் இழந்துள்ளனர். அவர்களின் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. 2009ல் பணியில் சேர்ந்தநுாற்றுக்கும் மேற்பட்டோர் எந்த பலனும் அடையாமல் ஓய்வு பெற்று விட்டனர்.

முதல்வர் விஜய், ஆசிரியர்கள் மீது நன்மதிப்பு வைத்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து 16 ஆண்டுகால சம்பள முரண்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog