பள்ளிகளுக்கான மத்திய அரசின் நிதி விடுவிப்பு:அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்
தமிழக அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கான மத்திய அரசின் நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான மானிய செலவின விவரங்களை அறிக்கையாக ஏப்.10-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கவும், வளாக பராமரிப்பு
பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுதோறும் மத்திய அரசின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
அதன்படி நிகழ் கல்வியாண்டு (2021-22) 31, 214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.77.90 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் முதல் தவணையாக 50 சதவீத (ரூ.38.95 கோடி) நிதி பள்ளிகளுக்கு கடந்த அக்டோபரில் வழங்கப்பட்டது. அதைத்தொடா்ந்து மீதமுள்ள தொகையானது தற்போது விடுவிக்கப்படுகிறது. இவற்றை பள்ளிகளின் மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் பிரித்து வழங்க வேண்டும். இந்த மானியத்தில் 25 சதவீத தொகையை இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் வாங்க பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், மானிய செலவீன விவரங்களை அறிக்கையாக இயக்குநரகத்துக்கு ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.