Question papers for the half-yearly exams will be provided directly to schools. -
அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்
அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்பு வரையான வினாத்தாள்களை எமிஸ் தளத்தில் டிச.3-ம் தேதி வரை மாவட்டக் கல்வி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின்னர் பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்டும்.
தொடர்ந்து வினாத்தாள்களை வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில் வைத்து தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய தினம் காலை 9 மணியில் இருந்து பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Monday, December 01, 2025
அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்
Model Question Paper
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.