2024ல் JEE,NEET,CUET தேர்வுகள் எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 22, 2023

Comments:0

2024ல் JEE,NEET,CUET தேர்வுகள் எப்போது?

When-are-JEE,NEET,CUET-Exams-in-2024
2024ல் ஜேஇஇ, நீட், கியூட் தேர்வுகள் எப்போது?

தேசிய தேர்வுகள் முகமை, நாட்டின் மிக முக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகள் எப்போதும் நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுவது ஜேஇஇ தேர்வு, இதில் தேர்ச்சி பெற்றால்தான் இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடிகளில் சேர்க்கை பெற முடியும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்றும், இரண்டாவது தேர்வு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தது க்யூட் தேர்வு. இது 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவிருப்பதாகவும், இளநிலை நீட் தேர்வு மே மாதம் நடைபெறவிருப்பதாகவும், குறிப்பாக மே 5ஆம் தேதி நடைபெறலாம் எனறும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2024 - 25ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த காலண்டரையும் என்டிஏ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை, என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். ஜேஇஇ

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் அடுத்த வாரம் வெளியிடப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னதாகவே தேதிகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. அதுபோல, நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களும் விரைவாகவே தொடங்கவிருக்கின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் அல்லது தேர்வுகள் குறித்து jeemain.nta.nic.in அல்லது nta.ac.in -இல் அறியலாம்.

நீட்

2023ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், 2024ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84603554