CUET Exam 2025 விண்ணப்ப பதிவு தொடக்கம் - மார்ச் 22 க்குள் விண்ணப்பிக்கலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 09, 2025

Comments:0

CUET Exam 2025 விண்ணப்ப பதிவு தொடக்கம் - மார்ச் 22 க்குள் விண்ணப்பிக்கலாம்.

cuet%20Exam


CUET Exam 2025 விண்ணப்ப பதிவு தொடக்கம்

கியூட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடத்தில் படித்தாலும் உயர்கல்வியில் விரும்பிய பாடத்தை தேர்வு செய்யலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லுாரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

2025-2026ம் கல்வியாண்டுக்கான இளநிலை கியூட் நுழைவுத் தேர்வு மே 8 முதல் ஜூன் 1 வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக மார்ச் 22 க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மார்ச் 23 கடைசி நாள். தொடர்ந்து விண்ணப்பங்களில் மார்ச் 24,25,26 தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கியூட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே நடப்பாண்டு கியூட் நுழைவுத் தேர்வு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடம் படித்திருந்தாலும்,விரும்பிய பாடத்தில் தேர்வு எழுதலாம். அதேபோல, ஒருவர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84674374