பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 23, 2022

Comments:0

பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு

பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.3 வரை நீட்டிப்பு

பி.இ., பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆக.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசமும் நீடிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்பு பி.இ., கலைக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 27 ஆக நீடித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், அம்மாணவர்களும், என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து, தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்றும், தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இதையும் படிக்க | பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்!

இந்நிலையில் நேற்று காலை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பி.இ., பிடெக்கின் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தின் கால அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84411651