போக்சோ புகார்களை கையாள ஆசிரியர்களுக்கு பயிற்சி Training for teachers on handling POCSO complaints
This Tamil newspaper article highlights a new initiative training teachers on how to properly handle and report POSCO (Protection of Children from Sexual Offences) complaints.
It explicitly advises teachers against providing direct counseling to children regarding these complaints to prevent potential mishandling of sensitive situations.
The directive emphasizes immediately reporting such cases to the police and ensuring the confidentiality of the children involved to maintain a safe environment.
According to the report, over 370 complaints were registered in May alone, prompting the need for this specialized training to increase awareness and improve the response mechanism
கோவை, ஜூன் 10-
பாலியல் சீண்டல் குறித்த புகார்கள் அதிகள வில் பதிவாவதால், அதை எப்படி கையாள்வது என் பது குறித்து ஆசிரியர்க ளுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
குழந்தைகள் மீதான வன்முறை குறித்த புகார் களை உடனடியாக பதிவு செய்வது, சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்ப டுத்துவது, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கவுன்சிலிங் அளிப்பது உள்ளிட்ட பணி கள் சைல்டு லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஆசிரியர்கள் கவுன்சிலிங் அளிக்கக்கூடாது
இங்கு, கடந்த ஏப். ஹப்சா கூறுகையில், "பள்ளிகளில் குழந்தை கள் ஆசிரியர்களிடம் புகார்கள் தெரிவிப்பதுண்டு. இச்சமயங்களில் ஆசிரியர்களே நேரடியாக இதில் தலையிட்டு கவுன்சிலிங் அளிக்க கூடாது. இது சில நேரத்தில் தவறான முடிவுகளை குழந்தை கள் எடுக்க வாய்ப்புண்டு. இப்புகார்களை உட னடியாக சைல்டு லைன், போலீசாரிடம் தெரி விப்பதோடு, அத்தகவல்களை ரகசியம் காப்பது அவசியம். அப்போது தான் பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பான சூழலில் இருப்பதாக உணகும்," என்றார்.
மே மாதங்களில் மட்டும் 370க்கும் மேற்பட்ட புகார் கள் பதிவாகின. இதில், குழந்தை திருமணம் சார்ந் தவை மட்டும் 20. இதே போல் போக்சோ புகார்கள் 15 பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட குழந் தைகளே இப்புகார் எண் ணிற்கு ற்கு அழைத்து தகவல் தெரிவிப்பதன் மூலம், விழிப்புணர்வு அதிகரித்தி ருப்பது உறுதியாகிறது.
பள்ளி திறந்த நிலை யில், போக்கோ புகார் களை, குழந்தைகள் ஆசி ரியர்களிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அதை எப்படி கையாள்வது என்பது குறித்து, விரைவில் ஆசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ள தாக, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.