தமிழ்மொழி சுருக்கெழுத்து தேர்வு - தொழில்நுட்ப கோளாறால் தவித்த மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 20, 2022

Comments:0

தமிழ்மொழி சுருக்கெழுத்து தேர்வு - தொழில்நுட்ப கோளாறால் தவித்த மாணவர்கள்

தமிழ்மொழி சுருக்கெழுத்து தேர்வில் ஒலி வெளியிட்டதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படத்து. இதில் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் சுருக்கெழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்றும் இன்றும்(19,20.03.2022) இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | CBSE 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் திருச்சி மாவட்டத்தில் 2 மையங்களில் (துவாக்குடி,சேதுராபட்டி) 1500க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதுகின்றனர். நேற்று ஜீனியர் சீனியர் தமிழ் மொழி சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு ஒலி வெளியிட்ட போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக யாருக்கும் சரியாக கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தேர்வு அனைவரும் சரியாக எழுதவில்லை என்றனர். எனவே தமிழ்நாடு வணிகவியல் சங்கம் சார்பாக மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .திருச்சி மதுரையிலும் இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். இன்று ஆங்கில மொழியில் சீனியர்களுக்கு சுருக்கெழுத்து தேர்வு தற்போது நடைபெற்றது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews