தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்குத் தமிழக அரசின் சார்பில், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோவை, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு நேற்று தமிழகத்திலுள்ள 18 மையங்களில், கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது. இத்தேர்வில், கூடுதலாக வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்காகக் கூடுதலாக 30 நிமிட நேரம் வழங்கப்பட்டு, மொத்தத் தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ஆசிரியர், ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தவகையில், சென்னையில் தேர்வு நடத்தப்பட்ட மையங்களில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.