வேளாண் பல்கலை. பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 16, 2021

Comments:0

வேளாண் பல்கலை. பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நவம்பர் 15- ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாகக் காரணங்களால் தரவரிசைப் பட்டியல் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவுத் தலைவர் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

2021-2022 -ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த நவம்பர் 2 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews