Breaking

Tuesday, November 16, 2021

வேளாண் பல்கலை. பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நவம்பர் 15- ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாகக் காரணங்களால் தரவரிசைப் பட்டியல் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவுத் தலைவர் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

2021-2022 -ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த நவம்பர் 2 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog