கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் பலர் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அவ்வாறு கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு சி.ஏ.படிப்பு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டண விலக்கு:
2019ம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா அலை பரவ தொடங்கியது. தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதனை தொடர்ந்து தினசரி இறப்பு விகிதம் அதிகரித்தது. இதன் காரணமாக மாணவர்கள் பலர் தங்கள் பெற்றோர்களை இழந்து தவித்தனர். கொரோனாவால் பெற்றோர்களை இழந்தவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது சி.ஏ படிப்பு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பினை பெற இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா எனும் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பம், நோக்குநிலை படிப்பு உள்ளடக்கிய ICITSS மற்றும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப, மேம்பட்ட நோக்குநிலை படிப்பு உள்ளடக்கிய AICITSS, நிர்வாகம் மற்றும் தொலை தொடர் திறன் என சி.ஏ படிப்பின் அனைத்து நிலைகளுக்கான பதிவு கட்டணத்தில் இருந்து கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 1, 2020 முதல் மார்ச் 31, 2023 வரை கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்கள் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம். விருப்பமுள்ள மாணவர்கள் www.icai.org எனும் இணையாளத்தில் பெற்றோர் கொரோனாவால் இறந்ததற்கான இறப்பு சான்றிதழை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.