மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பி.இ/ பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கான 2021 ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை நான்கு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆப்ரஹாம் உட்பட 44 பேர் 100% மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர் டாக்டர் சாதனா பராஸர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர் ரோஷனா 99.99% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
4 கட்ட தேர்வுகளிலும் பங்கேற்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் மாணவர்கள் அவற்றில் பெற்றிருந்த அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறு கணக்கிடப்பட்ட சிறந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் மாணவர்களின் தரவரிசை தயாரிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேர்வின்போது முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மொத்தம் 20 விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்களது தேர்வு முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.