குழந்தைகளுக்கு இலவச கல்வி; பைஜூஸ் நிறுவனம் திட்டம்
'நிடி ஆயோக்' அமைப்புடன் இணைந்து 112 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு 'ஆன்லைன்' வாயிலாக இலவச கல்வி வழங்க 'பைஜூஸ்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நம் நாட்டில் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண், நீர் வளம், உள்கட்டமைப்பு, நிதி, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியடைய முடியாமல் பல சவால்களை சந்திக்கும் மாவட்டங்கள் உள்ளன.இந்த மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க, நாட்டின் பிரபலமான கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நிடி ஆயோக் அமைப்புடன் இணைந்து 112 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச கல்வி வழங்க பைஜூஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான திட்டங்களை வரையறுக்க, குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
இதேபோல் சிறந்த 3,000 மாணவர்களுக்கு, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்காக தயார் படுத்தும் பயற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.