கேரளாவில் பிளஸ் 1 தேர்வுகளை நேரடியாக நடத்த, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்தது. நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில் 70 சதவீதம் கேரளாவில் பதிவானது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் தொற்று பரவல் குறைய துவங்கி உள்ளது.
இதையடுத்து, பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வை நேரடியாக நடத்த மாநில அரசு முடிவு செய்தது. அதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டன.இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் ரசூல்ஷான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. தேர்வு நடத்தப் போவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டது.தேர்வு நடத்த பின்பற்றப்பட உள்ள வழிமுறைகள் குறித்து கேரள அரசு விளக்கம் அளித்தது.இதையடுத்து, பிளஸ் 1 தேர்வை நேரடியாக நடத்த அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.