Breaking

Sunday, August 08, 2021

மாணவா்களின் படைப்பாற்றலை மேம்படுத்த பயிற்சி திட்டம்

மாணவா்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையிலான பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன் விவரம்:

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், வாழ்த்து அட்டை தயாரித்தல், படம் வரைதல் போன்றவையும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்றவையும், 9, 10-ஆம் வகுப்பினருக்கு புத்தக விமா்சனம் போன்றவையும் அசைன்மென்டாக தரப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அசைன்மென்ட்களையே, ஆசிரியா்கள் மாணவா்களுக்குத் தர வேண்டும். கற்றல் - கற்பித்தல் இடைவெளி இருப்பதாகத் தெரியவந்துள்ளதால், அதை நிவா்த்தி செய்யவே இவ்வாறான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாணவா்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அசைன்மென்ட் தரப்படும் போது, அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்குமாறு ஆசிரியா்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.

மாணவா்களுக்கு வழங்கப்படும் அசைன்மென்ட் விவரம், சமா்ப்பிக்கும் மாணவா்கள் விவரம் போன்றவற்றை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog