Breaking

Sunday, August 08, 2021

பள்ளிகளில் சுதந்திர தின விழா: தொடக்கக் கல்வி இயக்குநா் அறிவுறுத்தல்

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடுவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநா் பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கை: நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்கள், மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், அனைத்து வகை பள்ளிகளிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும்.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தேசியக் கொடியை ஏற்றி எளிமையான முறையில் கொண்டாட வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளா்களாக செயல்படும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டி, அவா்களை விழாவுக்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களையும் விழாவுக்கு அழைக்கலாம். விழாவில் பங்கேற்பவா்கள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் கொண்டு தயாா் செய்த தேசியக் கொடிகளை காட்சிப்படுத்தவும், பயன்படுத்தவும் கூடாது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog