தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் குழந்தைகளுக்கு இட ஓதுக்கீடு அடிப்படையில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை வழங்கப்படும் இலவச கல்விக்கான கட்டணத்தை அரசு அறிவித்துள்ளது.
கல்வி கட்டணம் அறிவிப்பு:
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு அரசு 25 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி அளிக்கிறது. இதன் மூலம் அனைவர்க்கும் கல்வி உறுதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க அரசு கால அவகாசமும் அளிக்கிறது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் கற்கும் மாணவர்களின் கல்வி செலவை முழுவதும் அரசே ஏற்கிறது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பெற விரும்புவோர் அரசின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் குழந்தையின் புகைப்படம், ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று நகல் போன்றவை அவசியம். மேலும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் எனில் அதற்கான உரிய சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2021- 22 ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 3 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து எல்.கே.ஜி முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி எல்.கே.ஜி முதல் 1ம் வகுப்பு வரை 12,458 ரூபாயும், இரண்டாம் வகுப்பிற்கு 12,449 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த வகுப்புகள் வாரியாக கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து கல்வி கட்டணத்தை மேலும் உயர்த்தி அறிவிக்க வேண்டும் தனியார் பள்ளிகள் சங்கம் அரசை வலியுறுத்தி வருகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.