Breaking

Thursday, March 05, 2026

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு



புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு - High Court orders Tamil Nadu government to respond to case against new pension scheme

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு கடைசிமாத ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும் வகையில் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்து, இது சம்பந்தமாக அரசாணையும் பிறப்பித்துள்ளது.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து விருப்ப ஓய்வுபெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், ‘புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளதால், 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் ஓய்வுபெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பங்களிப்பை வழங்கிய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது. அதை மறுப்பது, நியாயமற்றது. அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் தேதியை கணக்கில் கொள்ளாமல், ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 73 ஆயிரம் கோடி ரூபாய் எல்.ஐ. சி. நிறுவனத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறியிருப்பதால், 2025 டிசம்பருக்கு முன் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது’ எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்திய தொகை வட்டியுடன் சேர்ந்துள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மாதாந்திர ஓய்வூதியமாக 8,430 ரூபாயுடன், அகவிலைப்படியும் சேர்த்து, ஓய்வூதியம் வழங்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மார்ச் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார் தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Assured Pension Scheme - APS) எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி மற்றும் நீதிமன்ற உத்தரவு:

பதிலளிக்க உத்தரவு: மார்ச் 4, 2026 அன்று, இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, இது குறித்து தமிழக அரசு மார்ச் 26, 2026-க்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரர்: சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆர். ரேணுகாதேவி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் இந்த வழக்கைத் தொடந்துள்ளார்.

முக்கியப் புகார்:

அரசு அறிவித்துள்ள புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 31, 2025-க்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் கிடைக்காது என்பது சட்டவிரோதமானது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) இருந்தவர்களுக்கும் சமமான ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் சுருக்கம் (TAPS):

இந்தத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 50% ஓய்வூதியமாக உறுதி செய்யப்படுகிறது.

ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் 10% பங்களிப்பை வழங்க வேண்டும்.

ஜனவரி 1, 2026-க்குப் பிறகு பணியில் சேருபவர்களுக்கும், தற்போது பணியில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் நீண்டகாலமாகப் போராடி வரும் நிலையில், இந்த நீதிமன்ற உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. The Hindu

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog