புதுச்சேரியில் கல்வித்துறை செயல்பாடுகள் தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் கல்வியமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு உண்டு என்று தெரிவித்தார்.
நீட் தேர்வு:
புதுச்சேரியில் கல்வித்துறை தொடர்பாக பல்வேறு திட்டங்கள் மற்றும் கொரோனா குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லுரிகளில் ஆன்லைன் தேர்வு நடத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த ஊரடங்கு காலத்தில் பொது மக்களின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் புதுச்சேரியிலுள்ள 21 சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய பிரச்சனை கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்து நிலவி வருகிறது. அதை தற்போது சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு உறுதியளித்தார். மத்திய அரசின் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி கல்வி அமைச்சர், நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாங்கம். எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தான் நம்முடைய அரசாங்கத்தை நடத்த முடியும். அதனால் இங்கு நீட் தேர்வு உண்டு என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.