தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அடிப்படை பணியாளர் விபரங்களை வருகிற 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பணியாளர் தொகுதியில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பல அரசு பள்ளிகளில் அடிப்படை பணியாளர்களான துப்புரவு பணியாளர், இரவு நேர காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரந்தர பணியிடங்களாக நிரப்ப வேண்டும் என்பது தலைமை ஆசிரியர்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த பணியிடங்களுக்கு தற்காலிகமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் பல பணியிடங்கள் காலியாக இருப்பதால் பள்ளிகள் திறந்த பின்னர் தூய்மை பணி செய்ய ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டு மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகளும் விடுபடாமல் காலியாக உள்ள அடிப்படை பணியாளர்கள் விவரங்களை வருகிற 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பணியாளர் தொகுதியில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான பணி நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.