தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிகள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க, வல்லுனர் குழு அமைத்து பொதுமக்களின் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுவதால் பாடம் முழுவதையும் முடிக்க முடியாது என்பதால் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்கள் கோரிக்கை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் வருகிற 16 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழகத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பின் பொது செயலர் இளங்கோவன் கூறுகையில், ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மட்டுமே மாணவர்கள் முழுமையாக பாடங்களை படிக்கச் முடியாது. எனவே அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளிகள் திறக்க தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். முதலில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டவர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக வல்லுநர் குழு அமைத்து மருத்துவ, உளவியல் நிபுணர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களுடன் அரசிடம் அறிக்கை அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.