நீட் தேர்வு வினாத்தாள் அதிரடி மாற்றம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 14, 2021

Comments:0

நீட் தேர்வு வினாத்தாள் அதிரடி மாற்றம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

மருத்துவ நுழைவு தேர்வான நெட் தேர்வில் நடப்பு ஆண்டு வினாத்தாள் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு:

2021ம் ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். மேலும், நேற்று ( ஜூலை 14)ம் தேதி மாலை 5 மணி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடங்கலாம் என்று கூறப்பட்டது. இதேபோல், நேற்று மாலை தொடங்கிய விண்ணப்ப பதிவு இணையதள முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டது. இணையதள முடக்கம் விரைவில் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 6ம் தேதி வரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னதாக 180 கேள்விகள் கேட்கப்படும், ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். தற்போது நடப்பாண்டில், ஒவ்வொரு பாடத்திற்கும், எ பிரிவில் 35 கேள்விகளும், பி பிரிவில் 15 கேள்விகளும் கேட்கப்படும். இதில், A பிரிவில் உள்ள 35 கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். B பிரிவில் உள்ள 15 கேள்விகளில் ஏதேனும் 10 கேள்விக்கு பதில் அளித்தால் போதும். இம்முறையும் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும். மேலும், பதில் அளிக்காத கேள்விகளுக்கு மைனஸ் மதிப்பெண் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட்’ தேர்வு, தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா மற்றும் பஞ்சாபி என மொத்தம், 13 மொழிகளில் நடக்க உள்ளது. அதில், ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளை தேர்வு செய்தால் அந்த மொழி வினாத்தாள் அனைத்து மாநிலத்திலும் வழங்கப்படும். மற்ற மொழிகளை தேர்வு செய்தல், தாய்மொழியாக உள்ள மாநிலங்களில் மட்டுமே அந்த வினாத்தாள் அனுமதிக்கப்படும். மாநில மொழிகளை தேர்வு செய்யும் போது, மாநில மொழியுடன், ஆங்கிலமும் சேர்ந்து உள்ள வினாத்தாள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews