பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் அலுவலகங்களில் பணியாற்றிவரும் , மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றுப்பணி ஆணை பெற்று வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். நிருவாக நலன் கருதி அப்பணியாளர்களது மாற்றுப்பணி ஆணை இதன்மூலம் இரத்து செய்யப்படுகிறது.
மேலும் , மாற்றுப்பணியில் பணிபுரியும் பணியாளர்கள் உடன் மாற்றுப்பணியிலிருந்து பணிவிடுவிப்பு பெற்று ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள ( ஊதியம் பெறும் அலுவலகத்தில் ) பணியிடத்தில் மீளப் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி பணியாளர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Wednesday, June 23, 2021
பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மாற்றுப்பணியை இரத்து செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.