புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த லட்சுமணன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது மகள் கவுரி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கிராம புள்ளிவிவர (டேட்டா) பதிவை உருவாக்கியுள்ளார்.
அதை கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டுகள் வாரியாக அமல்படுத்தவும், மாவட்ட ஆட்சியர் போல, கிராம ஆட்சியர் என்ற ஒரு பதவியை ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி வீடியோ கான்பரன்சிங்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் பல தகவல்களை மனுவில் சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Friday, June 11, 2021
கிராம வளர்ச்சி திட்டம் தயாரிப்பு பள்ளி மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.