Breaking

Wednesday, June 09, 2021

மதுரை மாவட்ட மக்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு - பத்திரிகைச்செய்தி 08.06.21

வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறை (வேலைவாய்ப்புபிரிவு)
பத்திரிகைச்செய்தி
2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறியபதிவுதாரர்கள்பணிவாய்ப்பினைபெறும் வகையில் மீண்டும் ஒருமுறைபுதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழகஅரசின் அரசாணை(டி) எண்.204, தொழிலாளர் வாயிலாகவழங்கப்பட்டுள்ளது. மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை,நாள் 28.05.2021-ன் ஆரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.05.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27.08.2021 -க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.08.2021 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை மதுரை, மாவட்ட ஆட்சியர் Dr.திரு.அனீஸ் சேகர்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog