TNPSC - மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி , 15.06.2021 வரை நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 12, 2021

Comments:0

TNPSC - மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி , 15.06.2021 வரை நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகளும் , எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியலும் 08.05.2021 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 14 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து துறைத் தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன. கொரோனா பெரும் தொற்று காரணத்தால் தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , மீதமுள்ள தேர்வுகளின் முடிவுகள் 08.06.2021 அன்று வெளியிடப்படும் . மேலும் , இத்தேர்வுகள் எழுத விழையும் தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு , மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி , 15.06.2021 வரை நீட்டிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews