நீண்டகாலமாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வெழுதுவதற்கு மீண்டும் 3 வாய்ப்பு வழங்க அண்ணா பல்கலை. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளி யிட்ட அறிவிப்பில், “நீண்ட காலமாக அரியர் வைத்திருக்கும் மாணவர் களுக்கு மீண்டும் தேர்வு எழுத 3 வாய்ப்பு வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2021 ஆகஸ்ட்/செப்டம்பர், 2022 பிப்ரவரி, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பருவத் தேர்வுகளோடு சிறப்பு அரியர் தேர் வும் நடத்தப்படும். இந்த 3 இறுதி வாய்ப்புகளை பயன்படுத்தி அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு குறித்த முழு விவரம் பின்னர் வெளியிடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, முதுநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களின் அரியர் தேர்வுக்கான கால அட்டவணையையும் அண்ணா பல்கலைக்
கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
Saturday, April 17, 2021
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அரியர் தேர்வு எழுத மீண்டும் 3 வாய்ப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.