2ம் நிலை காவலர்களுக்கு 21ம் தேதி உடற்தகுதி தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 17, 2021

Comments:0

2ம் நிலை காவலர்களுக்கு 21ம் தேதி உடற்தகுதி தேர்வு

வேலூர் எஸ்பி செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 21ம் தேதி முதல் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது. தேர் வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட் டிக்கு வகையில், அழைப்பு கடிதம், ஏதேனும் ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையும் கொண்டு வர வேண்டும். மேலும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல் ஒன்றையும் கொண்டு வர வேண்டும். தேர்வு மையத்தில் அறிக்கை செய்யும் நேரத்தில் ஒரு வாரத்திற்குள் அதாவது 7 நாட்களுக்குள் கொரோனா பரிசோ தனை மேற்கொண்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண் டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உறுதி தன்மையை மூன்றாம் நபர் மூலமாக விண்ணப்பம் அழைப்பு கடிதத்தின் நகல் மற்றும் மருத்துவ சான்றுடன் குறிப்பிட்ட தேதிகளில் தங்களது தேர்வு மைய தலைவர் உதவி குழுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். மேலும் சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு நேரடியாக அனுப்பினால் ஏற்றுக் கொள்ள இயலாது. அவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு முறையாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து மீண்டவுடன் தனி ஒரு நாளில் தேர்வுகள் நடக்கும். விண்ணப்பதாரர் இத்தேர்வுகளில் அரைக்கால் சட்டை மற்றும் டி-சர்ட்டை அணிந்து கொண்டு கலந்து கொள்ள விரும்பினால் ஒரே வண்ணம் கொண்ட மற்றும் எவ்வித எழுத்துகளும் படங்களும் இல்லாத டி-சர்ட்டை அணிந்து வர வேண்டும். இத்தேர்விற்கு வரும் ஆண் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாமல் தங்களது தலைமுடியை காவலர் போன்று திருத்தம் செய்து வர வேண்டும். மகப்பேறு காலத்திலுள்ள பெண் விண்ணப்பதாரர் இத் தேர்வுகளில் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருந்தால் அரசு மருத்துவரிடம் இயலாமை குறித்து சான்றிதழ் பெற்று குறிப்பிட்ட தேதிகளில் தகுந்த விண்ணப்பம், அழைப்பு கடிதத்தின் நகல் மற்றும் மருத்துவச்சான்று இணைத்து தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த அறிவுரைகளை பின்பற்றி தேர்வு மையத் திற்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews