Breaking

Thursday, January 21, 2021

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு – போக்குவரத்து துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதால் பள்ளிகளில் உள்ள வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்க போக்குவரத்து துறை தயாராகி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள்: தமிழகத்தில் கொரோனா காரணமாக 10 மாதமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள வாகனங்களுக்கு வழக்கமாக மே மாதத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக அவை நடத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மொத்தம் 38 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. அதில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். இந்த ஆண்டு இவை நடத்தப்படவில்லை. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதால் போக்குவரத்து துறை சார்பில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் எதாவது பழுது ஏற்பட்டால் அந்த வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி) வழங்கப்படாது என்று போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog