தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த வழக்கு - அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 21, 2021

Comments:0

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த வழக்கு - அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு சுதந்திரமாக செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்த வழக்கு: தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி 19 முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளவை, “கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 10 மாதங்களாக குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 22.3 சதவிகிதம் மாணவர்கள் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலை மாற, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 50% மாணவர்களுக்கு 2 பிரிவுகளாக வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். பல மாதங்களாக மாணவர்கள் வீட்டிலேயே உள்ளதால் மாணவர்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதாக 87% பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே பள்ளிகளை திறக்க விரைவில் உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகள் தான் முடிவு செய்ய முடியும். பள்ளிகள் திறப்பது எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் மாணவர்களின் நலன் முக்கியம். எனவே தமிழக அரசு பள்ளிகள் திறப்பது குறித்த சாத்திய கூறுகளை ஆய்வு செய்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகள் திறப்பதில் சுதந்திர தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews