புதுச்சேரி அரசு சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கான இடஒதுக்கீடு 10% வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. தற்போது அந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் மனு அளித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை அடுத்து புதுச்சேரி அரசு சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கு இடஒதுக்கீடு 10% வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு குறித்து மத்திய அரசு சார்பில் இன்று பதில் மனு அளிக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளவை, “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வு மதிப்பெண்கள் தகுதி இல்லாமல் போய்விடும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிவிப்பு குறித்து தங்களின் கவனத்திற்கு ஏதும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் இந்த வழக்கு குறித்த ஆய்வுக்கு 6 வாரம் அவகாசம் வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
Search This Blog
Thursday, January 21, 2021
Comments:0
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு – மத்திய அரசு விளக்கம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.