Breaking

Friday, January 08, 2021

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளை அனுமதிப்பது முறையா?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக அரசின் வெளியிட்ட அரசாணைக்கும் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 50% இருக்கையே மட்டும்மே நிரப்பிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. மேலும் தமிழக அரசு எடுத்த முடிவுக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி மறுத்துள்ளது.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளை அனுமதிப்பது முறையா? என ஐகோர்ட் நீதிபதிபள் கேள்வி எழுப்பினர். தியேட்டர்கள் விவகாரத்தில் குழந்தைகள் போல அரசு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டும் என கூறியுள்ளது. 50% இருக்கைகளுக்கு அனுமதியளிக்கும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வரும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளது.மதுரை கிளையில் உள்ள வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த பிரபு வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படங்களுக்கு 100% இருக்கை அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog