Breaking

Thursday, January 21, 2021

பள்ளி மாணவிகளுக்கான இலவச நாப்கின் வழங்கும் திட்டம் – மாநில அரசு ஒப்புதல்

திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1.68 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு இலவச நாப்கின் திட்டம்: கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அரசு சார்பில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படுகிறது. திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இலவசமாக நாப்கின் வழங்க அந்த மாநில அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து திரிபுரா கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் கூறுகையில், “பள்ளி மாணவிகளுக்கான இலவச நாப்கின் வழங்க கிஷோரி ‘சுஜிதா அபியா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு சார்பில் 3 ஆண்டுகளுக்கு 3.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1.68 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள்”, இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog