6 நாட்கள் வகுப்பு.. வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது.. விளையாட்டு பாட வேலைகள் கிடையாது : பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 13, 2021

Comments:0

6 நாட்கள் வகுப்பு.. வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது.. விளையாட்டு பாட வேலைகள் கிடையாது : பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.
* தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
* பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். * வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
* ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
* 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.
* பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.
* மாணவர்களை பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது.
* வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
*உடற்கல்வி விளையாட்டு பாட வேளைகள், என்சிசி, என்எஸ்எஸ் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews