தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் பொங்கல் முடிந்து ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதில் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்க வேண்டும் என்றும், 10 முதல் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் இயங்கும் என தெரிவித்துள்ளது.
பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் வைத்திருப்பது அவசியம். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம். ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். பெற்றோர் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம். அவர் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே 6 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
* பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும். * தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
* வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.
* வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
* ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
* 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.
* பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.
* மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.