Breaking

Saturday, November 28, 2020

போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொழிலாளா் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும், வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சில ஆசிரியா் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டன. இதையடுத்து அரசின் உத்தரவை மீறி போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog