வேளாண் கவுன்சிலிங் டிச., 1 வரை நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 25, 2020

Comments:0

வேளாண் கவுன்சிலிங் டிச., 1 வரை நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 'நிவர்' புயல் காரணமாக, டிச., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்கலை மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் அறிக்கை:இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு இடஒதுக்கீடு கவுன்சிலிங், நவ., 26ல் துவங்கி, 28 வரை நடப்பதாக இருந்தது. 'நிவர்' புயல் காரணமாக, டிச., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நவ., 30 காலை, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மதியம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஒதுக்கீடு கவுன்சிலிங் நடக்கும். டிச., 1 காலை, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும், மாலை தொழில்முறை கல்வி பாடப்பிரிவு சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கும் கவுன்சிலிங் நேரடியாக நடக்கும்.டிச., 2ல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு, இணையதளம் வாயிலாக அறிவிக்கப்படும். மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், இ - மெயில் மற்றும் மொபைல் எண் வாயிலாக தெரிவிக்கப்படும். டிச., 7 முதல், டிச., 24 வரை, சான்றிதழ் சரிபார்ப்புக்காக, ஒவ்வொரு நாளும், 600 மாணவர்கள் அழைக்கப்படுவர். பின், தற்காலிக இடஒதுக்கீடு கடிதம் வழங்கப்படும். அனைத்து விபரங்களையும், https://tnauonline.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews