Breaking

Sunday, November 01, 2020

அரியா் மாணவா்கள் தோ்ச்சி விவகாரம்: சென்னைப் பல்கலை. விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரியா் மாணவா்கள் தோ்ச்சி விவகாரத்தில் இதுவரை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என துணைவேந்தா் கெளரி தெரிவித்தாா்.சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசிடம் கூடுதல் நிதி கோருதல் உட்பட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பின் கூட்டம் முடிந்த பின் துணைவேந்தா் கெளரி செய்தியாளா்களிடம் கூறியது: அரியா் மாணவா்கள் தோ்ச்சி விவகாரத்தில் இதுவரை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு காத்திருக்கிறோம். சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறையைத் தீா்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. கல்விக்கொள்கையை நன்கு ஆராய்ந்து அரசின் வழிகாட்டுதலின்படி இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும், கல்விக்கொள்கையை உடனடியாக அமல்படுத்தக் கோரி யுஜிசி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றாா் அவா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog