Breaking

Friday, July 24, 2020

'நீட்' வழக்கில் சிக்கிய மாணவர் கல்வி சான்றிதழ் கோரி வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய மாணவர், கல்வி சான்று கோரி, உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடர்ந்துள்ளார்.
'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், சென்னை மாணவர், உதித் சூர்யா கைதாகி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கை, தேனி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.உயர் நீதிமன்ற கிளையில், உதித் சூர்யா தாக்கல் செய்த மனுவில், 'போலீசார் என்னை கைது செய்தபோது, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்றை பறிமுதல் செய்தனர். கலை, அறிவியல் கல்லுாரியில் சேர, கல்விச் சான்று தேவைப்படுகிறது.'அவற்றை வழங்க போலீசாரிடம் கோரினேன். நடவடிக்கை இல்லை. என் அசல் கல்விச் சான்றுகளை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.நீதிபதி, ஆர்.பொங்கியப்பன் நேற்று விசாரித்தார்.அரசுத் தரப்பில், 'சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில், வழக்கு ஆவணங்களுடன், மனுதாரரின் கல்விச் சான்று தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது' என தெரிவிக்கப் பட்டது.மாணவர் தரப்பில், 'கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு எவ்வித ஒப்புதலும் தரப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.நீதிபதி, ''இவ்விவகாரம் குறித்து, அரசுத் தரப்பில் இன்று தெளிவுபடுத்த வேண்டும்,'' என, உத்தரவிட்டார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog