Breaking

Friday, July 24, 2020

என்.ஐ.டி.,களில், 'அட்மிஷன்' புதிய சலுகை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
என்.ஐ.டி., எனப்படும், தேசிய தொழில்நுட்ப மையம் மற்றும் மத்திய நிதி பெறும் தொழில்நுட்ப மையங்களில் சேருவதற்கான தகுதியில், புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருமான, ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:என்.ஐ.டி., மற்றும் மத்திய நிதி பெறும் தொழில்நுட்ப மையங்களில் சேருவதற்கு, ஜே.இ.இ., எனப்படும் பொது நுழைவுத் தேர்வு தகுதியுடன், பிளஸ் 2 தேர்வில், 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்த முறை இந்த தகுதியில் சலுகை அளிக்க, மத்திய சீட் ஒதுக்கீட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். அதில், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து, இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog