சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 20, 2020

Comments:0

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கிரகணம் என்பது ஒரு சாதாரண வானிலை நிகழ்வு என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தாலும், இந்தியர்களைப் பொறுத்தவரையில் கிரகணம் என்பது ஒரு அசுப நிகழ்வு என நினைக்கின்றனர். சாதாரண மக்கள் மட்டுமில்லாமல், கர்ப்பிணிப் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் மீது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
சூரிய கிரகணம் ஜூன் 21ம் தேதி(நாளை) காலை 10:17 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடைகிறது. மதியம் 2.02 மணிக்கு கிரகணம் முடிவடையும். இந்த கிரகண நேரத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள். மனக்குழப்பம்:
கிரகணம் என்பது இந்து புராணப்படி இறைவனை பூஜிக்க மட்டும் தான் ஏற்ற நேரம். மற்ற எந்த ஒரு செயலுக்கும் ஏற்றதல்ல. இந்த நேரத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். புதிய திட்டங்களை எதுவும் செயல்படுத்தாமல் இருப்பதே நல்லது.
சந்திரன் மனோகாரகன் என்பதால் மன சஞ்சலம் தரக் கூடியவாரக இருப்பார் என்பதால் கவனம் தேவை.

உணவு எடுப்பதை தவிர்க்கவும்
பொதுவாக கிரகண நேரத்தில் யாரும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகளும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடிந்தால் தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். வேண்டுமென்றால் கொதிக்க வைத்த நீரை ஆற வைத்து குடிப்பது நல்லது. அப்படி நாம் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொண்டாலும், நம் வயிற்றில் உணவு இருந்தாலும் அதனால் செரிமான பிரச்னை உண்டாகும். இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் அவரின் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாம் சமைத்த உணவு கிரகணத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே சாப்பிடுவது நல்லது. உணவு பொருட்கள் மீதமிருந்தால் அதன் மீது தர்ப்பைப் புல் அல்லது துளசி இலையை போட்டு வைப்பது அவசியம். வெளியில் வர வேண்டாம் :
கிரகண நேரத்தில் யாரும் வெளியில் வராமல் இருப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிகள் வராமல் இருப்பது அவசியம். சூரிய கிரகணத்தின் போது தீய கதிர்வீச்சுக்கள் வெளியாகும் என்பதால் அது கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கக்கூடும். தர்ப்பை புல் கிரகண நேரத்தில் வெளியாகும் தீய கதிர்வீச்சுக்களை உட்கிரகிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் காரணமாக நாம் சமைத்த உணவு மீது தருப்பைப்புல் போட்டு வைப்பது நல்லது.

பயணம் செய்ய வேண்டாம்
கிரகண நேரத்தில் மன குழப்பம், கவன சிதறல் நிலவும் என்தால் பயணம் செய்தல், வேறு எங்கும் செல்லுதல் தவிர்ப்பது நல்லது.
உடலுறவு கூடாது
பொதுவாக சந்திராஷ்டம நாளிலேயே நாம் உடலுறவு கொள்வது தவிர்ப்பது அவசியம் என கூறப்படுகிறது. அதே போன்ற நிகழ்வு தான் கிரகணமும். இந்த கிரகண நேரத்தில் உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பதால், அந்த பெண்ணுக்கும், அதனால் உருவாகும் குழந்தைக்கும் மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும். நகம் வெட்டுதல் கூடாது
அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்கள் உடம்பின் மீதும், தலைக்கும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் கூடாது. அதே போல் நகம் வெட்டுதல் கூடாது. உடல்ம்பில் ஏதேனும் ஒரு இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் சொரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அப்படி செய்தால் குழந்தைக்கு மங்கலான மச்சம் போன்ற அடையாளம் ஏற்படும் என்பது ஐதீகம்.

என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக கிரகண நேரம் இறைவனை வழிபடுவதற்கு மட்டும் தான் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் இறைவனை துதிப்பதால் சாதாரணமாக நமக்கு கிடைக்கும் பலனை விட 100 மடங்கு அதிகமான பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. கர்ப்ப காலத்தில் அந்த பெண் இறை வழிபாடு செய்வதும், புராண கதைகளை படிப்பதால் அந்த குழந்தைக்கு நல்லருள் கிடைக்கும் என்பது போம். கிரகண நேரத்தில் இதை செய்தால் பல மடங்கு நற்பலன்கள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாமல் மற்ற நபர்கள் இறைவனின் மந்திரங்களை கூறி வழிபடுவது நன்மையைத் தருவது. எளிய மந்திரங்கள் :
ஓம் சிவாய நமஹ
ஓம் கணபதியே நமஹா
ஓம் சரவண பவ
ஸ்ரீ ராம ஜெயம்
ஓம் நமசிவாய
உள்ளிட்ட எளிய மந்திரங்களை சொல்வதும், கந்த புராணம், இராமாயணம், அனுமன் சாலிசா, மகாலட்சுமி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை சொல்லி வருவது அவசியம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews