Breaking

Friday, June 19, 2026

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை

The article details a demand from the Tamil Nadu Post Graduate Teachers Association for free medical treatment for teachers and government employees.

It mentions that employees currently contribute ₹30 per month, while pensioners contribute ₹495 per month, for a medical insurance scheme that is set to expire on June 30.

The Association urges the government to renew this scheme as a free treatment initiative in the upcoming budget rather than just renewing the insurance.

Additionally, the text notes that the Madras High Court has provided guidance to the government regarding the implementation of this comprehensive free health insurance plan.


ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை Free medical treatment for teachers and government employees. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூன் 18-

"ஆசிரியர், அரசு ஊழி யர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை உறுதி செய்து வரும் பட் ஜெட் கூட்டத் தொடரில் அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்."என தமிழக முதுநிலை பட்டதாரி ஆசி ரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் வலியுறுத்தினார்.

அவரது அறிக்கை:

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021ன் படி ஆசி ரியர், அரசு ஊழியர்களி டம் மாதந்தோறும் ரூ. 30ம், ஓய்வூதியர்களுக்கு ரூ.495ம் பிடிக்கப்படு கிறது. அனைத்து நோய் களுக்கும் 100 சதவீதம் கட்டணமில்லா சிகிச்சை வழங்க வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு அதை நிறைவேற்ற வில்லை. மாதந்தோறும் சந்தா ஒழுங்காக செலுத்தியும் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை மருத்துவ தேவைப்படும்போது காப் பீட்டு தொகை கிடைப்ப தில்லை.

இதனால் பலர் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படு கிறது. நீதிமன்றமும் காப்பீட்டு உச்சவரம்பிற்கு உட்பட்டு முழு தொகையையும் வழங்க வேண்டும் எனடீத் தரவிட்டது.

தமிழக அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் வாழ்வாதாரத்தை காக் கும் நோக்கில் கட்டண மில்லா மருத்துவ சிகிச்சை முறையை அமல்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தை விரிவ டைந்த காப்பீடு திட்டமாக மாற்றி, கட்டணமில்லா சிகிச்சை அளிக்குமாறு அர சுக்கு உயர்நீதிமன்றம் வழி காட்டுதல் வழங்கியது.

ஏற்கனவே இருக்கும் திட்டம் ஜூன் 30ல் முடி வடைகிறது.

இதை அப்படியே புதுப்பிக்காமல் வரும் பட் ஜெட் தொடரில் கட்டண மில்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்என வலியுறுத் தினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog