அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி , இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை ஜூன் 6 - க்குள் அனுப்பு மாறு அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் பிரிவு ) எஸ்.நாகராஜமுருகன் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை : அனைத்து அரசு , நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1.06.2020 நிலவரப்படி நிரப் பத் தகுந்த பட்டதாரி , இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை ஜூன் 6 - க்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் .
இந்த விவரங்களை அனுப்பும் போது 1.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியர் இன்றி உபரி எனக் கண்டறிந்து , இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக் கப்பட்ட பணியிடங்களையும் , கூடு தல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங் களாக கருதக் கூடாது . இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது .
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021 வருடாந்திர தேர்வுக் அட்டவணைப்படி , 730 இடைநிலை ஆசிரியர் காலியிடங் களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு பற்றிய அறிவிப்பு வரும் ஜூலை 9 - ம் தேதியும் , அதேபோல் , 572 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களுக்கான அறிவிப்பு ஜூலை 17 - ம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.