Breaking

Friday, May 22, 2020

கொரோனா வைரஸுக்காக புதிய செயலி.. ஆப்பிள் - கூகுள் இணைந்து வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸுக்காக புதிய செயலி ஒன்றை ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ளன.
உலகம்முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகள் முழுவதும் போராடி வருகின்றன. இருப்பினும் சமூகப் பரவலால் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து புதிய செயலி ஒன்றை வெளியிட்டுள்ளன. இந்தச் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்திருந்தால் அவர் தெரிவிக்கலாம். இதன்மூலம் கொரோனா வைரஸ் உள்ள நபரையும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களையும் இந்தச் செயலியை வைத்திருப்பவர்கள் அறிந்துகொள்ளலாம். இதனால் சமூகப் பரவலைத் தடுக்க முடியும் என நம்பப்படுகிறது. டிராஃபிக் ஜாம் அப் செயல்படுவது போல இது கொரோனா வைரஸ் பாதிப்பு உடையவர்களை அடையாளம் காட்டும் எனப்படுகிறது. இந்தச் செயலியை அமெரிக்கா மற்றும் 22 நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதேசமயம் இந்தச் செயலியின் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog