👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இறந்தால், அவர்களின் உடலை, தங்கள் நிலத்தில் அடக்கம் செய்யலாம் என, பிரதமர் மோடிக்கு மதுரை மாணவி கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியைச் சேர்ந்த, பாரதிதாசன் மகள் தென்னரசி. தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.இவர், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'என் தந்தை விவசாயி. எங்களுக்கு, 3 ஏக்கர் நிலம் உள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் உள்ள டாக்டர், நர்ஸ், போலீசார், நாளிதழ் மற்றும் துாய்மை பணியாளர்கள் வைரஸ் பாதிப்பால் இறந்தால், உடலை அடக்கம் செய்ய, எங்கள் நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.
தென்னரசி கூறியதாவது: கொரோனா பாதிப்பால் இறந்த, சென்னை டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அறிந்து, வேதனை அடைந்தேன். நம் பாதுகாப்பிற்காக பணியாற்றுபவர்களுக்கு நாம் தான் உதவ வேண்டும்.வைரஸ் பாதித்து, சம்பந்தப்பட்ட துறையினர் இறந்தால், அவர்களை அடக்கம் செய்ய நம் இடத்தை தரலாமே என தந்தையிடம் கேட்டேன். அவரும் சம்மதித்தார்.இதைத் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஏற்கனவே, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'தினமலர்' அலுவலகம் மூலமாக, 25 கிலோ அரிசி வழங்கியுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.