Breaking

Friday, April 24, 2020

சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு ரத்து!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற எழுத்துத்தேர்வு தற்போது நிர்வாகக் காணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு கடந்த 13.12.2015 அன்று வெளியிடப்பட்டு இப்பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு 23.1.2016 அன்று நடைபெற்றது.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணிக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலிருந்து செய்தி விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 'சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு எண். 001, நாள் 13.12.2015 ன்படி, நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணி நியமனம் தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு 23.1.016 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தற்போது நிர்வாக காரணங்களினால் உடனடியாக இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog